Thursday, 1 May 2014

எப்பித்தீலியம் பூசலையோ !!!

பெண்ணியம் , சாதீயம் , மார்க்சீயம் தெரியும். அது என்ன எப்பித்தீலியம் ?
கண்டந்திப்பிலி மாதிரி நாட்டு மருந்தா இருக்குமோ ?  உடம்பில் உள்ள பாகங்களை அவற்றின் பாதுகாப்புக்காகவும் , அவற்றின் வேலை திறன் பொறுத்தும் சுற்றி இருக்கும் கோட்டிங் பெயர் தான் எப்பிதீலியம் (epithelium).
ஆம்.நீங்கள் நினைப்பது சரி தான். பித்தளை சாமானுக்கு பாதுகாப்பாக ஈயம் பூசுவது போன்றே தான் (வெள்ளைக்காரன் நம்மகிட்ட தான் எல்லாத்தையும் காப்பி அடிச்சு இருக்கான் :-)

பொதுவா உருவத்தை பார்த்து ஒருத்தர எடை போடுவது தப்புன்னாலும் இங்கே மைக்ரோஸ்கோப்பில் தெரியும் உருவத்தை கொண்டே எப்பிதீலியம் வகைப்படுத்தப்படுகிறது. அடுக்குகளின் எண்ணிக்கை ஒற்றை என்றால் சிம்பிள் (simple) அல்லது பல அடுக்கு என்றால் ஸ்ட்ராடிப்பைட் (stratified) .
அதே மாதிரி தட்டையா இருந்தா ஸ்குவாமஸ் (squamous) , குட்டையா கட்டையா இருந்தா க்யூப்பாயடல் (cuboidal) உசரமா அமிதாப் பச்சன் மாதிரி இருந்தா காலம்னார் -columnar. (காலமானார்னு படிச்சா கம்பெனி பொறுப்பில்ல ; column - தூண் ). இந்த அடுக்கு எண்ணிக்கை மற்றும் உருவங்களின் பெர்முடேஷன் காம்பினேஷனின் அடிப்படையில் எட்டு வகையான எப்பிதீலியம் மனித உடம்பில் குறிப்பிடப்படுகின்றன.

அவற்றின் உருவம் , வேலை , எந்த பாகங்களில் உள்ளன என்பதை இனி காண்போம்.
வகை
உருவம்
பணி
காணப்படும் உறுப்புகள்
சிம்பிள் ஸ்குவாமஸ்
(simple squamous)
ஒற்றை அடுக்கு
தட்டையான செல்கள்
(நம்ம ரஜினிகாந்த் மாதிரி சிம்பிளான ஆளு)
காற்று , உணவு மற்றும் இதர வஸ்துக்களை இவற்றின் வழியாக செல்லும்.

உராய்வை தடுக்க ஆயில் மாதிரியான சுரப்புகளை செய்வதும் உண்டு.
சிறுநீரகத்தின் பில்டர்கள் (glomeruli)
நுரையீரலின் காற்று பைகள் (air sacs of lungs)

இதயம் , ரத்த குழாய்களின் உட்புறம்.
சிம்பிள் க்யூப்பாயடல்
(simple cuboidal)
ஒற்றை அடுக்கு.
கட்டை குட்டையான ஏறக்குறைய சதுரமான செல்கள்.

சுரத்தல்
(
secretion)

உள்ளிழுத்தல்/உறிஞ்சுதல்
(absorption)

சிறுநீரக பில்டர்களின் குழாய்கள்
(renal tubules)

சினைப்பையின் சுற்றுப்புறம்
(ovary surface)

சிறு சுரப்பிகளின் நாளங்களின் உட்புறம்.
சிம்பிள் காலம்னார்
(simple columnar)
ஒற்றை அடுக்கு ,
உயரமான செல்கள்.

இதுலே ரெண்டு வகை இருக்கு. குடுமி வெச்சு இருக்குறது சீளியேட்டட்
(ciliated)

குடுமி இல்லாதது
நான்-சீளியேட்டட்
(non-ciliated)


உறிஞ்சுதல்

என்சைம்கள் இதர வஸ்துக்கள் சுரத்தல்

சீளியேட்டட் வகைகளுக்கு சளி போன்ற சுரப்புகளை வெளி தள்ளுவது வேலை.
இந்த குடுமி நம்ம கார் வைப்பர் மாதிரி வேலை செய்யும் ...ஆனா, ஒரே பக்கமா .

நான் சீளியேட்டட் -

செரிமான பாதை முழுவதும் இவங்க ராஜ்ஜியம் தான்
வயிறில் இருந்து மலக்குழாய் வரை.

சீளியேட்டட் -
நுரையீரல் குழாய்கள், கருப்பை குழாய்கள் .

சூடோ ஸ்ட்றேடிஃபைட் கால்ம்னார்
(pseudo stratified columnar)
ஒரே அடுக்கு தான். ஆனா வெவ்வேறு நிலையில் ந்யூக்லீயஸ் இருப்பதால் பல அடுக்கு மாதிரி தோற்றம் தரும். அதான் இப்படி ஒரு பேரு.

குடுமி வகையறா உண்டு இங்கேயும் .


சுரத்தல்

சுரப்புகளை வெளிதள்ளுதல்

சீளியேட்டட் -

சுவாச குழாய்
(
trachea)

சுவாசப் பாதையின் மேல்பகுதிகள்

நான் –சீளியேட்டட்

பெரிய சுரப்பிகளின் நாளங்கள்,
விந்தணுவை கொண்டு செல்லும் நாளங்கள்.
ஸ்ட்றேடிப்ஃபைட்
ஸ்குவாமஸ்
(
stratified squamous)
ISO சான்றிதழ் பெற்ற ஒரிஜினலா பல அடுக்கு உடையவங்க இவங்க

அடிப்பகுதி செல்கள் நெட்டை /குண்டாகவோ

மேல்பகுதியில் தட்டையாகவும் இருக்கும்.

இந்த சாதில  கெரட்டினைசட்
(
keratinzed)
நான் – கெரட்டினைசட்ன்னு
(
non- keratinized)
ரெண்டு உட்பிரிவுகள்உராய்வு அதிகம் ஏற்படும் பகுதியில காக்குற கார்ட் மாதிரி இது.

நான் – கெரட்டினைசட்

உடம்பின் ஈரமான பகுதிகள் எல்லாவற்றிலும் வாய், உணவுக்குழாய்,மலத்துவாரம் , பெண் உறுப்பு


கெரட்டினைசட்

நம்ம தோல் முழுக்க இந்த வகை தான்
ஸ்ட்றேடிப்ஃபைட்
க்யூப்பாயடல்
(stratified cuboidal)
ஐஸ் க்யூப் போன்ற செல்கள்

இரட்டை அடுக்குகள்

பாதுகாப்பு

வியர்வை, எச்சில் , பால் சுரப்பிகளின் நாளங்கள்
ஸ்ட்றேடிப்ஃபைட்
காலம்னார்
(stratified columnar)

பல அடுக்குகள் நெட்டை செல்கள்


பாதுகாப்பு

சுரத்தல்

கொஞ்சம் அரிதானது.

ஆண்களின்
சிறுநீர்த்தாரைகளில் சிறதளவு காணப்படும்
டிரான்சிஷனால்
(transitional)
ஸ்ட்றேடிப்ஃபைட்
ஸ்குவாமஸ்
பாதி
ஸ்ட்றேடிப்ஃபைட்
க்யூப்பாயடல் பாதி கலந்து செய்த கலவை

ரெண்டு வகை மாதிரியும் இருந்து குழப்பும்


நெகிழும் தன்மை உடையது
(stretchable)
சிறுநீர் நிரம்பும் பொது சிறுநீர்ப்பை விரிவடைய உதவுகின்றன.

சிறுநீர் குழாய்கள் ,சிறுநீர்ப்பை

                             


படிச்சவன் பழைய கணக்கை புரட்டுன மாதிரி எதுக்கு இவ்ளோ டீடெயிலு ?

ஒரு கட்டியோ அல்லது உறுப்பிலோ பாதிப்பு ஏற்பட்டால் அது சாதாரணமானதா அல்லது புற்றுநோயா என்று கண்டறிவதற்கு இந்த வகைப்படுத்துதல் உதவுகின்றது. யாரும் இருக்கும் இடத்தில் இருந்து விட்டால் எல்லாம் சவுக்கியமே. சம்பந்தமில்லாத இடத்தில் சம்பந்தமில்லாத வகை தோன்றும் பொது அது பிரச்சினையை சுட்டி காட்டுகிறது. அதை விரிவாக ஆராயும் பொது புற்றுநோயின் தன்மை தெரிய வரும்.

அது பற்றிய செய்திகள் அடுத்த கட்டுரையில் ........

No comments:

Post a Comment